search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம் லுவாங்"

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட கால்பந்தாட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் அடுத்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் வீடியோவை தாய்லாந்து அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் நோட், ‘நான் நன்கு உடல் நலம் தேறி வருகிறேன் என்னை மீட்ட மீட்புக் குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்திருந்ததும் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில், சிறுவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வியாழன் அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். 
    சிறுவர்கள் சிக்கித்தவித்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாகவும், மீட்பு குழுவின் தைரியமான மீட்பு பணிகளை திரைப்படமாகவும் எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை மக்கள் பார்வையிடும் வகையில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது என சிறுவர்களை மீட்ட மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.

    மீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    மேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான திரில் தருணங்களை திரைப்படமாக எடுக்க உள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில் தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
    ×